திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்தில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் இறுதிச்சடங்குகள் ஒளிபரப்பப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக பூங்காக்கள், தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் மக்கள் இறுதிச் சடங்கை காண திரைகள் அமைக்கப்பட்டு, ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

1997ல் இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலமும், 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியும் பிரித்தானிய வரலாற்றில் பதிவாகியுள்ளன.

ராணியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய ராணி எலிசபெத் 2 உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் திகதி தனது 96ஆவது வயதில் காலமானார்.

இதைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையிலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, லண்டனில் உள்ள பார்லிமென்ட் மாளிகையில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அரச மரியாதைக்காக வைக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எலிசபெத்தின் உடலுக்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Previous articleஇலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!
Next articleமனைவியின் கிட்னியை திருடி விற்று அடுத்த திருமணம் முடித்த கணவன்..!