யாழில் பல சிறுமிகள் துஷ்பிரயோகம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலம் பகுதியிலும், கோட்டைப் பகுதிக்கு வெளியிலும் தொடர்ச்சியாக பல சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முனியப்பர் கோவிலுக்கு பின்புறம் மற்றும் கோட்டைக்கு வெளியே உள்ள பகுதிகளில் பல பள்ளி மாணவிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

கடந்த சில மாதங்களில் இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண்ணை பாலத்தின் கீழ் பகுதியில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளைகளின் செயற்பாடுகளை பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமெனவும், இப்பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் மாவட்டச் செயலகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமனைவியின் கிட்னியை திருடி விற்று அடுத்த திருமணம் முடித்த கணவன்..!
Next articleவவுனியாவில் திடீரென பரவிய காட்டுத்தீ!