பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாயம்!

பேரதானை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரதானை பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் யக்கல மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளங்கலை மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று காலை வரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleநாட்டில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
Next articleமனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் : கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!!