மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் : கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!!

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் அகிலா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ரூ.20 லட்சம் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

திருமணமாகி சில வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மனைவி அகிலாவை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த விஷயம் தனது உறவினர் ஒருவர் மூலம் அறிந்த அகிலா, தனது உறவினர்களுடன் கணவரின் புது வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், கணவரை அங்கிருந்து அழைத்து வந்து மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.

பின்னர், கணவரை தொடர்ந்து செருப்பால் அடித்ததோடு, சந்தன மாலையும் அணிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஸ்ரீகாந்தை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாயம்!
Next articleமனைவியின் இரண்டு கைகளையும் வெட்டி வீசிய கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!