வாயில்லா பிராணியை காரில் கட்டி தரதரவென வீதியில் இழுத்துச் சென்ற மருத்துவர்!

நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி டாக்டர் ஒருவர் காரில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ராஜஸ்தானில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 37 வயது மருத்துவர் ஒருவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் சில மாதங்களாக தெருநாய் ஒன்று சுற்றித் திரிகிறது.

நாய் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காது என்றும், யாராவது வைத்திருந்தால் எஞ்சிய உணவை உண்ணும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த நாயை டாக்டருக்கு பிடிக்கவில்லை. வேலைக்குச் செல்லும் வழியில் நாயைக் கல்லால் அடிப்பது வழக்கம்.

அதுமட்டுமின்றி நகராட்சியை தொடர்பு கொண்டு நாயை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் தெருநாயை பிடிக்க முயன்றனர்.

“அந்த நாயை ஏன் அழைத்துச் செல்கிறாய்? நாய் யாரையும் தொந்தரவு செய்வதில்லை என்றும், அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், நாயின் மீது கோபமடைந்த மருத்துவர், வேலைக்குச் செல்லும் போது நாயை பெரிய கயிற்றால் காரின் கண்ணாடியில் கட்டிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

வாயில்லா மிருகம் காரைத் தொடர்ந்து ஓடும்போது கார் வேகமெடுத்ததால் நாய் பரிதாபமாக ஓடியது. இந்நிலையில், காரின் பின்னால் இருந்த வாகன ஓட்டி ஒருவர், இந்தக் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பின்னர் காரின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் டாக்டரிடம் இருந்து நாயை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleநாட்டில் நிலவும் எழுத்துபிழைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க தூதுவர்!
Next articleயாழில் பட்டம் விட்டு கவனயீர்ப்பு போராட்டம்!