திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!

திருகோணமலை பகுதியொன்றில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (19-09-2022) இடம்பெற்றுள்ளது.

திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய பொன்னம்பலம் சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய நிலையில் குறித்த நபர் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
Next articleஇலங்கை பெண்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் அவலம்!