இலங்கை பெண்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் அவலம்!

ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை கூலித் தொழிலாளிகளாக அழைத்துச் சென்று தகாத வேலைகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதற்காக பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வு குழுக்களை அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புலனாய்வு சேவை, குடிவரவுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபடும் முகவர்கள், தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூலித்தொழிலாளியாக சென்று முதலாளிகளால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெருமளவான பெண்கள் அங்கு தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

ஓமானில் உள்ள ஒரு பாதுகாப்பான வீட்டில் அழுத்தம் தாங்க முடியாமல் சுயநினைவை இழந்த ஒன்பது பெண்கள் இருப்பதும் தெரிந்ததே.

Previous articleதிருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!
Next articleஅரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!