அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரிசி விலை உயர்வை தடுக்க, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசிக்கான வரி அளவை குறைக்க வேண்டும்.

இலங்கையில் அரிசி உபரியாக இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த 2020/21 பருவத்தில் ஐந்து மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இயற்கை விவசாயம் காரணமாக அரிசி அறுவடை செய்யப்படாததால் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Previous articleஇலங்கை பெண்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் அவலம்!
Next articleயாழில் இந்திய மீனவர்கள் அதிரடி கைது!