யாழில் வீதியால் சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞர் ஒருவரைமர்ம கும்பல் வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டாவில் கிழக்கு செ. துசாலன் (வயது 18) என்ற இளைஞனே வாளால் வெட்டப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கில் நண்பரின் பிறந்தநாளுக்காக சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, நவாலி சம்பந்தப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வன்முறைக் கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீதிக்கு ஓடினாலும் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிய வன்முறைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதன் பின்னர் தாக்குதலுக்கு இலக்கானவர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் கசிப்புடன் சிக்கிய அதிகாரி!
Next articleநாட்டில் அதிகரித்து வரும் HIV நோயாளிகள்!