யாழில் பட்டப்பகலில் துணிகரம்; வீதியால் சென்றவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், சங்கானைப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற நபரை வழிமறித்து கத்தியால் வெட்டி தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சங்கானையைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் சங்கானை நகருக்குச் சென்றுவிட்டு அம்பிகாவத்தை வீதியூடாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ​​அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், நபரை வெட்டி, ஒன்றரை பவுன் செயின் மற்றும் மோதிரத்தை பறித்துச் சென்றார். மேலும் அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

Previous articleபைக்கில் செல்லும்போது திடீரென வெடித்த புதிய செல்போன்… தீப்பிடித்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!
Next articleஉணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த 12 இலங்கை தமிழர்கள்!