யாழில் திருட்டுத்தனமாக ஆட்டோவில் மாட்டினை கடத்திய நபர் : வசமாக சிக்கினார்!

வட்டுக்கோட்டையில் அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கரவண்டியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற சந்தேகநபர் பொலிஸாரால் இன்று (20-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் இருந்து நாவாந்துறைக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட போது, ​​அப்பகுதி மக்கள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசிய தகவலை வழங்கியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன் பசுவையும் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பசு மாட்டின் கால்களை கட்டி, தலைகீழாக வைத்து கொடூரமான முறையில் பசுவை கடத்தி சென்ற குற்றத்திற்காக, விலங்கு வதை சட்டத்தின் கீழும், அனுமதியின்றி கடத்திய குற்றத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.