பணம் அனுப்பாத மனைவி; ஆத்திரத்தில் குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தை!

குடிபோதையில் தந்தை ஒருவர் தனது இரண்டு மகள்களை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் கோதாவரியில் உள்ள தாடே பள்ளிக்குடத்தை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி குவைத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் சம்பாதித்த பணத்தை கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த பணத்தை கணவர் மது வாங்க பயன்படுத்துவதை அறிந்த மனைவி பணத்தை அனுப்புவதை நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவி தனது இரு மகள்களையும் துன்புறுத்தி வந்துள்ளார்.

குடிபோதையில் தனது இரு மகள்களை தாக்கும் வீடியோவை பார்த்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.

Previous articleவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உயிரிழப்பு!
Next articleகுடியால் விபரீத முடிவெடுத்த கணவர்; நிர்க்கதியான குடும்பம்!