திரிபோக்ஷாவில் விசமா! வெளியான தகவல் !

திரிபோஷா உற்பத்தியின் போது அஃப்ளாடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சூத்திரத்தில் அதிக அளவு அஃப்லாடாக்சின்கள் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடம் இது குறித்து விசாரித்ததாக அதன் தலைவர் தேவிகா கொடிதுவவிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திரிபோஷ வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திரிபோஷா உற்பத்தியின் போது, ​​அஃப்லாடாக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படுவதாகவும், அது தொடர்பான குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திரிபோக்ஷத்தில் விசாமம்! | திரிபோக்ஷ விஷப் பிரச்சினை

திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.