யாழில் பல்கலைகழக மாணவிக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 17 வயது இளைஞன் அதிவேகமாக மோதியதில் யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பரமேஸ்வரா சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்கும் திருகோணமலையைச் சேர்ந்த மாணவி ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மாணவர் மீது மோதியுள்ளார்.

படுகாயமடைந்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞனும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleதிரிபோக்ஷாவில் விசமா! வெளியான தகவல் !
Next articleஇணைய விளையாட்டுக்கு அடிமையான மகன்; தாயின் வங்கி கணக்கில் மோசடி!