யாழில் பிரபல பாடசாலை அருகில் பாக்குவிற்றவர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகில் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் சதா பாக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் சதா என்ற ஒரு தொகை பையை பறிமுதல் செய்து கடை உரிமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து, மீட்கப்பட்ட போதைப்பொருளையும், கைது செய்யப்பட்ட நபரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleயாழில் ஆதிசிவன் பூமியை காக்க களமிறங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்!
Next articleபாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விபச்சாரம்! குற்றப் புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் இரு பெண்கள் கைது..!