பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விபச்சாரம்! குற்றப் புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்பில் இரு பெண்கள் கைது..!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தி வரும் விபச்சார விடுதியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நுகேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 45 மற்றும் 43 வயதுடைய பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையதளத்தில் விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை இலக்குவைத்து,

நீண்ட காலமாக இந்த பாலியல் தொழில் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், விளம்பரங்களைப் பார்த்து பல மாணவர்கள் பாலியல் விடுதிக்கு வருகை தந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Previous articleயாழில் பிரபல பாடசாலை அருகில் பாக்குவிற்றவர் கைது!
Next articleஇரு கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் Bonda Mani ! வீடியோ வாயிலாக உதவி கேட்ட நடிகர் Benjamin