யாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த வயோதிப பெண் : வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளவத்தை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து 70 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வயோதிப பெண் திருமணமாகாமல் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறப்பதற்கு முன் கடிதம் எழுதியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇரு கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் Bonda Mani ! வீடியோ வாயிலாக உதவி கேட்ட நடிகர் Benjamin
Next articleமின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!