கிளிநொச்சியில் கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம்!

கிளிநொச்சி கிராமம் ஒன்றில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (21-09-2022) மாலை பிரமானந்தாறு – கண்ணகிநகர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 19ம் தேதி தர்மபுரம் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலையை கட்டுப்படுத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இந்த கலவரத்தின் தொடர்ச்சியே நேற்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஒரு மாணவனுக்காக இயங்கும் பாடசாலைகள்!
Next articleமந்திரவாதியின் செயலால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்