வேலைக்கு சென்ற இரு பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த சோகம் : பொலிஸார் வலைவீச்சு!

அத்தனக்கல்லை – ஹெலபனகந்த பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சென்ற பெண், நேற்று (21) மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற நபர் தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த 37 வயதுடைய பெண் ஒருவர் வட்டுப்பிட்டிவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இக்கொலை தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்!
Next articleதிடீரென வீதிக்கு வந்த ஜனாதிபதி : செல்பி எடுத்த பொதுமக்கள்!