திடீரென வீதிக்கு வந்த ஜனாதிபதி : செல்பி எடுத்த பொதுமக்கள்!

கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது அங்கிருந்த இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிய வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய விசேட புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற 23 ஆவது கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர நினைவேந்தல் புத்தகக் கண்காட்சிக்கு இலங்கைப் புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவைப் பெறுவோம் என நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று காலை கண்காட்சி மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவேரா வரவேற்றார்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன. வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் அரங்குகளுக்குச் சென்று புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி கேட்டறிந்து சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

Previous articleவேலைக்கு சென்ற இரு பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த சோகம் : பொலிஸார் வலைவீச்சு!
Next articleநாட்டில் நாளைமுதல் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்!