நாட்டில் நாளைமுதல் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23) முதல் ஞாயிற்றுக்கிழமை (25) வரை 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கு கடற்கரையில் உள்ள மின் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய லக்சபான நிலையம் சேவையில் ஈடுபடாத காரணத்தால் மின் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏ முதல் டபிள்யூ வரையிலான 20 மண்டலங்களில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது.

Previous articleதிடீரென வீதிக்கு வந்த ஜனாதிபதி : செல்பி எடுத்த பொதுமக்கள்!
Next articleமுப்பது வருடங்களின் பின் திருகோணமலை துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் செயல்!