மஹிந்தவின் மலசல கூடத்துக்கு 600 கோடி செலவு!

ஸ்ரீலங்கன் விமான சேவையில் கழிவறை அமைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், மோசடிகளுக்கு எதிரான போராட்டங்களினூடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், மோசடி செய்து பாராளுமன்றத்திற்குள் வருபவர்கள் பலர் என்றும் அவர் விமர்சித்தார்.

தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவசரமாக கொண்டு வரக்கூடிய விடயம் அல்ல. அதை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். எனினும் தேசிய சபையின் தற்போதைய செயற்பாடுகள் நாடகமாகவே இருக்கும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பெரும் பங்காற்றியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த போது அவருக்கு 50 இலட்சம் நட்டஈடு வழங்கப்பட்டது. இதன் பின்னர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.

இதன்பின், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை செயல்பாட்டு இயக்குநராக நியமித்து, அவருக்கு உதவித் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருமானம் ஈட்டி வந்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் கழிவறை அமைப்பதற்காக 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.

எனினும் அதனை நல்லாட்சி அரசாங்கம் நிராகரித்துள்ளது. 600 கோடி ரூபா செலவில் மலசலகூடம் நிர்மாணிக்கப்படுவதாயின் அதற்கு தங்கப் பொருத்துதல்கள் பொருத்தப்பட வேண்டுமென சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.