யாழில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்த மர்ம நபர் : பொலிஸார் வலைவீச்சு!

குடிபோதையில் மைத்துனியுடன் உறவில் ஈடுபட முயன்ற இளைஞனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் போதையில் இருந்ததோடு, அப்பகுதியில் வசிக்கும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளதுடன் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இளைஞரின் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதால், அண்ணன் வீட்டுக்குச் சென்று அவர் இல்லாத நேரத்தில் அண்ணியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இளைஞனிடம் இருந்து தப்பிச் சென்ற மைத்துனி, இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தற்போது குறித்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleயாழில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவன் : வெளியான காரணம்!
Next articleயாழில் தலைதெறிக்க ஓடிய கடத்தல்காரர்கள் : பின்னர் நடந்த அசம்பாவிதம்!