சாலையில் விபத்துக்குள்ளான கனரக வாகனம் !

வெலிமடை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளானது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

லொறியில் சாரதியும் உதவியாளரும் பயணித்ததாகவும், எனினும் உதவியாளர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்களின் உதவியுடன் பாரவூர்தியில் இருந்த உருளைக்கிழங்குகளை வேறு பாரவூர்தியில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் தலைதெறிக்க ஓடிய கடத்தல்காரர்கள் : பின்னர் நடந்த அசம்பாவிதம்!
Next articleபிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!