யாழில் மாயமான மாணவி சோகத்தில் குடும்பத்தினர்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் பாடசாலை முறையான பரீட்சைக்கு சென்றிருந்த போது காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மதிவதனன் லக்சைனி என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

திரையரங்கு மற்றும் மேடைப் பரீட்சைக்காக பாடசாலைக்குச் சென்ற இவர் கடந்த புதன்கிழமை முதல் வீடு திரும்பவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு – மீறினால் சட்ட நடவடிக்கை !
Next articleமின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் அதிர்ச்சியில் பொதுமக்கள்!