மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

நிலக்கரி செலுத்தாததால் நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்தடை செய்யப்படும் என தெரிய வந்துள்ளது.

நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள 21 நிலக்கரி கப்பல்கள் உடனடியாக வரவில்லை என்றால் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை நிலக்கரி கிடைக்காவிட்டால் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் நாட்டில் 40 வீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருவதாலும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் வறட்சியான காலநிலை நிலவுவதாலும் மின்சார விநியோகத்தில் பாரிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleயாழில் மாயமான மாணவி சோகத்தில் குடும்பத்தினர்!
Next articleயாழில் போதையில் கர்ப்பமான சிறுமி : அதிர்ச்சியில் பெற்றோர்!