யாழில் போதையில் கர்ப்பமான சிறுமி : அதிர்ச்சியில் பெற்றோர்!

போதைக்கு அடிமையான சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 வயதுடைய பெண் ஒருவர் கொடிய போதைப்பொருளான ஹெரோயினுக்கு அடிமையாகி மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி 08 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுமி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் பெறுவதற்காக தவறான நடத்தையில் ஈடுபட்டதால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மறுபுறம் யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Next articleஇலங்கையில் உணவகம் ஒன்றில் மீன் இறைச்சியில் தூண்டில் முள்ளுடன் பரிமாறிய அதிர்ச்சி சம்பவம்!