வனப்பகுதிக்கு தீ வைத்த மாணவர்கள் கைது!

வனப் பகுதிகளுக்கும் தீ வைத்த குற்றச்சாட்டில் 16 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 15 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, ஹலிலெல மற்றும் நமுனுகுல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எல்ல வனப்பகுதியை பார்வையிட வரும் சிலர் குறித்த பிரதேசத்தை அழித்து வருவதாக எல்ல பிரதேச சபையின் தலைவர் மாலக பிரபாத் தெரிவித்தார்.

Previous articleயாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் முகாம்!
Next articleபிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : வெளியான காரணம்!