பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது!

பண்டாரகோஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் தனது பிறந்த குழந்தையை தரையில் கைவிட்டு சென்ற பெண்ணொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு பெண் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடுதலின் போது உரம் பையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை அப்பெண் மீட்டுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்து ஆம்புலன்சை வரவழைத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous articleயாழ்.காரைநகரில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் இவர்களே! பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு.. !
Next articleடீசல் இன்மையால் டீசல் தாங்கி ஊர்தியை கடத்திய இருவர் கைது!