இன்று இடம்பெற்ற கோர விபத்து; மாணவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் !

கொழும்பு – ஹொரண பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை பஸ் மீது மோதியுள்ளது.

25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகாதலனது பிறந்த நாளை கொண்டாட வீட்டில் இருந்து 20,000 திருடிய பாடசாலை மாணவி!
Next articleவைத்தியரின் தவறான அறுவை சிகிச்சையால் பலியான இளம்பெண்!