யாழிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு குறைந்ந கட்டணம் : வெளியான அறிவிப்பு!

FitsAir (FitsAir) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டண விமான சேவையை விரைவில் தொடங்கும் என அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ்ஏர், கொழும்பில் இருந்து துபாய், மாலி மற்றும் திருச்சிக்கு அக்டோபர் முதல் சர்வதேச விமானங்களை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ் சர்வதேச விமான நிலையத்துடன் சேவைகளை மேற்கொள்ள விரும்பும் இந்திய விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தார்.

ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார்.

FitsAir விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், அரசு தரப்பில் இதுவரை அதற்கான பதிலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவைத்தியரின் தவறான அறுவை சிகிச்சையால் பலியான இளம்பெண்!
Next articleபிறந்த குழந்தையை 50,000 ரூபாய்கு விற்பனை செய்த தந்தை!