யாழில் தனிமையில் இருந்த பெண்ணிற்கு நடந்த சோகம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் வீட்டில் நுழைந்த சந்தேக நபர்கள் இருவர் பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று காலை, வீட்டின் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு, வீட்டின் பிரதான கதவை உடைத்து உள்ளே புகுந்த இருவர், பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleகிளிநொச்சியில் வயோதிப தம்பதிகளை கட்டிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள்!
Next articleஇலங்கையில் மண்வெட்டியால் தந்தையை அடித்து கொன்று தந்தையின் உடலுக்கு தீ வைத்த மகன்!