கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய பயணிகள் பேருந்து !

நேற்று (27) இரவு அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுஓயா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்துள்ளதுடன், காயமடைந்த 06 பயணிகள் ஹிகுரகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் கொள்ளையடித்து படகு மூலம் தமிழம் தப்பியோடிய கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி!
Next articleயாழ். மாநகர சபையில் ஏற்பட்ட குழப்பம்: வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் !