நாட்டில் திடீரென குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்புக்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் படி 92 தர பெற்றோலின் புதிய விலை 410 ரூபாவாகவும் 95 தர பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பெற்றோல் 92 இன் விலை லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், பெற்றோல் 95 இன் விலை லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெட்ரோல் 92 இன் புதிய விலை ரூ.410 ஆகவும், பெட்ரோல் 95 இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.510 ஆகவும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 இன் விலை லிட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லிட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும். பெட்ரோல் 92 இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.410 ஆகவும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.510 ஆகவும் இருக்கும். மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும். pic.twitter.com

Previous articleஇலங்கையில் தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசம்!
Next articleயாழில் தீயில் எரிந்த நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு! விசாரணையில் வெளியான தகவல்