மறைந்த இலங்கையின் பிரபல நடிகரின் இறுதி கிரியை தொடர்பில் விசேட அறிவிப்பு!

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் மாரடைப்பு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனது 41வது வயதில் காலமானார்.

இரத்தினபுரி, தம்சுவானா பகுதியைச் சேர்ந்த இவர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்ஷன் தர்மராஜ் 2008 ஆம் ஆண்டு சிட்னி சந்திரசேகரா இயக்கிய A9 என்ற சிங்கள நாடகத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதே ஆண்டில் சிங்கள மொழிப் படமான பிரபாகரன் மூலம் தனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினார்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான இனியவன், சுனாமி போன்ற சிங்களப் படங்களிலும் நடித்துள்ளார்.

தர்ஷன் தர்மராஜ் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரபலமான தமிழ் மொழித் திரைப்படமான கோமாளி கிங்ஸிலும் நடித்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணி முதல் அவரது உடல் சுதர்சி கலைஞர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் நாளை மாலை 6 மணியளவில் அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அத்துடன், இறுதிச் சடங்குகள் தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என அவரது உறவினர்கள் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர்.

Previous articleயாழ்.வைத்தியர்களின் செயல்… குவியும் வாழ்த்துக்கள்!
Next articleஅதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்ட முச்சக்கரவண்டி சங்கங்கள்!