புத்த கோவில்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு !

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புத்த கோவிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இந்து சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளுடன் இந்த புத்த கோவிலின் இடிபாடுகளும் காணப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் விளக்குகின்றனர்.

புத்த கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், 26 இந்து கோவில்கள், 26 குகைகள், 2 ஸ்தூபிகள், 24 கல்வெட்டுகள், 46 சிலைகள் மற்றும் கல் சிற்பங்கள் மற்றும் 19 நீர் தொட்டிகள் ஆகியவற்றின் இடிபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த எச்சங்கள் பாண்டவர் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல மாத ஆய்வுக்குப் பிறகு எச்சங்களை கண்டுபிடித்ததாக கூறுகிறார்கள். இந்த காடு 1938 க்குப் பிறகு ஆராயப்பட்டது என்றும் கூறப்படுகிறது.