மீண்டும் அதிகரித்த கோதுமை மா விலை!

கோதுமை மா உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இந்த வாரம் அழைக்கப்பட்டுள்ளனர்.

கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வந்துள்ள நிலையில் கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோதுமை மாவின் புதிய விலை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகார சபையுடனான இந்த வார கலந்துரையாடலில், கோதுமை மாவின் விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் கோரப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோதுமை விதைகளை இறக்குமதி செய்து இலங்கையில் பயிரிட அரசாங்கம் முன்வந்தால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என சட்டத்தரணி திஷான் தர்மசேன தெரிவித்துள்ளார்.

Previous articleபொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் குறி தவறியதில் யுவதியொருவருக்கு நேர்ந்த கதி!
Next articleயாழில் பாடசாலை மாணவியின் காணொளி உரையாடலினால் நேர்ந்த நிலை!