திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் நொச்சிக்குளம் பகுதியில் டிமோ பட்டை வீதியை விட்டு விலகிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கஹடகஸ்திகிலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் பாடசாலை மாணவியின் காணொளி உரையாடலினால் நேர்ந்த நிலை!
Next articleமலையகத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பெண் ஒருவர் பலி!