கடவுள் சொன்னதாக கூறி ஆறு வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்!

இந்தியாவின் டெல்லியில், கடவுள் சொன்னதாக கூறி, ஆறு வயது சிறுவனை இரண்டு இளைஞர்கள் பலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி லோதி காலனி பகுதியில் 6 வயது சிறுவன் இறந்து கிடந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், கட்டுமானப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரை கைது செய்தனர்.

பணக்காரனாக வாழ வேண்டுமானால் ஆண் குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என்று கடவுள் கூறியதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயின் கதறி அழுதது பார்ப்பவர்களை கலங்க வைத்தது.

Previous articleயாழ்.பல்கலைகழகத்திற்கு சீனா வழங்கிய உதவி!
Next articleசாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் கரையொதிங்கிய பெண் ஒருவரின் சடலம்!