இரவு உணவுக்காக பலாக்காய் பறிக்க சென்ற இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்!

37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் இரவு உணவிற்காக அக்கம் பக்கத்திலுள்ள தோட்டத்திற்குச் சென்ற பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 30ஆம் திகதி கொடக்கவெல மொரகஹயதுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பெண் பலாக்காயை பறிக்கச் சென்ற தோட்டத்தில் இரண்டு கட்டுதுவக்குகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த பொலிசார் அவற்றைக் கைப்பற்றினர்.

மேலும், இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தோட்ட பராமரிப்பாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அன்றைய தினம் மாலை தோட்டத்திற்கு பலகை பறிப்பதற்காக சென்ற போது உயிரிழந்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கொடக்காவெல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous article10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை வரும் : வெளியான விபரம்!
Next articleயாழ்.கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகள்!