யாழில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் பலி!

மோட்டார் சைக்கிள் வடிகாலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி சுண்டிக்குளம் கல்லாறு பகுதியைச் சேர்ந்த 3 பேர் புளியம்போகனி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

புளியம்போகனி பகுதியில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்துள்ளது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் பாவி ராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் வீட்டுக்குள் நுழைந்து தாய் மற்றும் மகனை கட்டிவைத்து தாக்கி கொள்ளை!
Next articleவவுனியாவில் இடம்பெற்ற வோகனச்சோதனையில் சிக்கிய பொருட்கள்!