மாணவியை தாக்கிய அதிபருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள்!

பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கொட்டகலை – பட்டானை – பொகஹாவத்தை பிரதேச பாடசாலை அதிபரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

அதிபரின் தாக்குதலில் மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், மத்திய மாகாண ஆளுநரின் தலையீட்டின் பேரில் அவருக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் பணம் வசூலித்ததாகவும், அதனை செலுத்த மறுத்த மாணவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தரப்பினர் தெரிவித்தனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் விரைவில் விசாரணை நடத்தி அதிபரை மீண்டும் பாடசாலையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.