யாழ். கடற்கரையில் கரையொதிங்கிய ஆண் ஒருவருடைய சடலம் : விசாரணைகள் தீவிரம்!

யாழில் உள்ள கடற்கரையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.மாதகல் – திருவடிநிலை கடலிருந்து இச்சடலம் மிட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் – திருவடிநிலை கடலில் அமைந்துள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleஆயுதபூஜையால் நடுவிதியில் பூசணிக்காய் உடைப்போருக்க எதிராக நடவடிக்கை!
Next articleபாடசாலை மாணவியின் தவறான வீடியோவை வெளியிட்ட மூவர் அதிரடி கைது!