பாடசாலை மாணவியின் தவறான வீடியோவை வெளியிட்ட மூவர் அதிரடி கைது!

17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த மற்றும் மகந்தனமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், குறித்த காணொளியை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களிடம் கொடுத்து பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ். கடற்கரையில் கரையொதிங்கிய ஆண் ஒருவருடைய சடலம் : விசாரணைகள் தீவிரம்!
Next articleஇம்மாத இறுதியில் இந்தியாவிற்கு சேவையை ஆரம்பிக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்!