யாழில் மரண வீட்டிற்கு சென்றவரின் வீட்டில் நடந்த சம்பவம்!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் இறுதிச் சடங்கிற்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பதற்றமடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததுடன் வீட்டில் இருந்த 06 பவுன் நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் இரு பெண்கள் செய்த மோசமன செயல் : கைது செய்த பொலிஸார்!
Next articleயாழில் கசிப்புடுன் சிக்கிய மாணவன் : நிதிமன்ற உத்தரவில் அனுப்பப்பட்ட இடம்!!