பாடசாலையில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகர்!

பாடசாலை ஒன்றில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில்
இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி புத்தகம் படிப்பதற்காக சென்ற வேளையில் நூலகர் கையைபிடித்து இழுத்து சென்று துன்புறுத்தியுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தொலைபேசியில் செய்த முறைப்பாட்டினையடுத்து மொரட்டுவ பொலிஸாரால் பாடசாலையின் 61 வயதான நூலகர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

Previous articleமுகநூல் வழியாக காதல் வலையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற இளைஞர்!
Next articleயாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி : மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!