யாழ். மானிப்பாய் பகுதியில் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே கதிமுனையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேகநபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் தங்கச் சங்கிலிகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் பொலிஸ் மா அதிபர் நிக்கோலஸ் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Previous articleநாட்டை உலுக்கிய கண்டிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!
Next articleமுல்லைத்தீவில் உள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை!