யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 73 வயது வயோதிபர் !

யாழில் 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் வியோதிபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் இருபாலையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் 13 வயது சிறுமி ஒருவர் முதியவரால் வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பமடைந்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், வயோதிபரை கைது செய்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிசார் மருத்துவப் பரிசோதனையை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் முதியவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous articleமுல்லைத்தீவில் உள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை!
Next articleயாழில் நபர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!