பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ். டிக்டாக் பிரபலம்!

தமிழ்நாட்டின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பிக் பாஸ் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், 6வது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பதால், பிக் பாஸ் வீட்டிற்குள் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது.

மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பும் போது பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இதில் பங்கேற்க சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் ஆர்வமுள்ள பொது மக்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் ரசிகர்கள் யார் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் ஆர்வமுள்ள பொது மக்களும் விண்ணப்பிக்கலாம்.

அதனால் ஆயிரக்கணக்கானோர் ‘ஏன் பிக் பாஸில் சேர விரும்புகிறார்கள்’ என்று வீடியோ எடுத்து சேனலுக்கு அனுப்பினர். அவர்களில் சிலர் பரிசீலித்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பட்டியலில் உள்ள சிலரைப் பற்றியும் செய்திகள் வெளியாகின. தற்போது மேலும் மூன்று பேரின் விவரம் கிடைத்துள்ளது.

அவர்கள் யார் என்று பார்க்கலாமா? சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு சூப்பர் மாடல் என்று கூறப்படுகிறது.

யாஷிகா ஆனந்த் போல் சினிமாவுக்காக முயற்சி செய்து வருகிறார். இதில் இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஜனனி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Previous articleகொதிநீர் பீப்பாயில் தவறுதலாக விழுந்து சிறைக்கைதி பலி!
Next articleஓடும் ரயிலில் கணவனை வாளால் வெட்டிவிட்டு மனைவியை தாக்கி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற கும்பல்!