ராஜபக்சர்கள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்துமாறு கோரி, ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் நாளை வர்த்தக நிலையங்கள் பூட்டு : வெளியான காரணம்!
Next articleகல்வி கற்பதற்காக பௌத்த பிக்குவாக இலங்கை வந்த பங்களாதேஷ் பிரஜை காவி உடை களைந்து காதலியுடன் வாழ்க்கை!